கத்தாருக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 2 முதல் புதிய வழிமுறைகள் அமல்!

290

தோஹா (30 ஜுலை 2021): கத்தாருக்கு இந்தியா உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வரும் ஆகஸ்ட் 2 முதல் அமலுக்கு வருகின்றன.

இதுகுறித்து இந்திய தூதரகம் இந்திய பயணிகளுக்கு விடுத்துள்ள உத்தரவின்படி, கத்தாரில் தடுப்பூசி போடப்பட்டது குறித்து ஆவணம் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். இரண்டாவது நாளில், RTPCR சோதனை எடுத்து கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வந்துவிடலாம்..

அதேவேளை கத்தாருக்கு வெளியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பத்து நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். அதேவேளை. தடுப்பூசி பெறாத குடும்பம், பார்வையாளர், சுற்றுலா மற்றும் வணிக விசா வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

புதிய பயணக் கொள்கையின் கீழ், கத்தாருக்கு திரும்ப வருவதற்கு விசா வைத்திருக்கும் யணிகளுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாக இருக்கும். என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.