குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு தனிமைப் படுத்தலில் சலுகை!

Qatar tops In Corona Cure 1
Share this News:

தோஹா (17 ஜூலை 2021): கத்தர் நாட்டிற்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடாமல் வரும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு, தனிமை படுத்தலில் 14 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது.

இந்த நடைமுறை, குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.

டிஸ்கவர் கத்தர்  என்கிற இணைய தளத்தில் இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் முன்பதிவினையும் மேற் கொள்ளலாம். (www.discoverqatar.qa)

கத்தருக்கு வருபவர்கள் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி பெற்றிருந்தால் தனிமைப் படுத்தல் அவசியமில்லை என்றும் அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்கள், கட்டாயம் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்படுவது அவசியம் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு, சிறிய ஊதியம் பெறும் தொழிலாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹோட்டலில் தங்குவதால் உண்டாகும் செலவைத் தவிர்க்க விரும்புவோர், இரண்டு தடுப்பூசிகளையும் இட்டபின் கத்தாருக்குச் செல்வது அவசியம்.


Share this News:

Leave a Reply