சவுதியில் நடந்த இந்திய குடியரசு தின கால்பந்தாட்டப் போட்டி!

Share this News:

ஜித்தா (6 பிப் 2022): இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கு மாகாணம் தமிழ்நாடு மாநில கமிட்டி சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டி 28-1-2022 வெள்ளி கிழமை காலை 8:30 மணியளவில் இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் நாடு மாநில கமிட்டி தலைவர் பொறியாளர் முஹம்மது முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் யுனைட்டட் ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அணிக்கும், இந்தியன் சோசியல் ஃபோரம் கேரள அணிக்கும் இடையே ஷரஃபிய்யா ODST ஹோட்டல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய கமிட்டி செயலாளர் பொறியாளர் அல் அமான் அஹமத் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

ஆட்டத்தின் முதல் பாதியில் 5-3 என்ற கோல் கணக்கில் கேரள அணியின் கை ஓங்கியிருந்தது. இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி 2 கோல் அடித்து எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி 5-5 என்ற எண்ணிக்கையில் சமன் செய்தது. பின்பு நடந்த பெனால்டி சூட் முறையில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. போட்டியை பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் துவக்கமாக இந்தியன் சோசியல் ஃபோரத்தின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தலைவர் முஹம்மது முகைதீன் அவர்கள் குடியரசு தின வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு கால்பந்தாட்ட போட்டியின் நோக்கத்தை விளக்கி தலைமை உரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த டாக்டர் அகமது பாஷா மற்றும் சமூக ஆர்வலர் பொறியாளர் காஜா அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அதில், இந்திய ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்திட ஒன்றாக பாடுபடுவோம் என்று கூறினார்கள்.

கலந்துகொண்ட அணிகளுக்கு விருந்தினர்கள் கோப்பைகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக இந்தியன் சோசியல் ஃபோரம் ஷரஃபிய்யா கிளை தலைவர் முகமது ரியாஜ் அவர்கள் நன்றியுரை வழங்க பரிசளிப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஷரபிய்யா கிளை செயலாளர் நைனா முகம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.


Share this News:

Leave a Reply