கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி!

780

தெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் அதிபர் மீது,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்களுக்கு உடனடியாக தகவல் தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ரூஹானி, “ஈரானில் பிபரவரி 19 ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. . பிப்ரவரி 21ல் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவு வந்தபிறகு மக்களுக்கு தகவல் தெரிவிக்க இருந்து தகவல் தெரிவித்தோம், நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தோம். எங்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல.” என்றார். மேலும் “கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை” என்றும் அவர் தெரிவித்தார்.