வெற்றிகரமாக நடந்த ஹஜ் யாத்திரை – சவுதி இளவரசர் தகவல்!

453

மக்கா (12 ஜூலை 2022):, அனைத்து பாதுகாப்பு, சேவை மற்றும் சுகாதார நிலைகளிலும் 2022 புனித யாத்திரை சிறப்பாக நடைபெற்றதாக சவூதி இளவரசரும், ஹஜ் குழுவின் தலைவருமான காலித் அல்-ஃபைசல், தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இவ்வருடம் உலக நாடுகளிலிருந்து ஹஜ் யாத்ரீகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு யாத்ரீகர்கள் வருகை புரிந்துள்ளனர்.

இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளால் யாத்ரீகர்களுக்கு விபத்துக்களோஅல்லது தொற்றுநோயோ எதுவும் பதிவாகவில்லை என்று சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார்

மேலும் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி இலவசரசர் நன்றி தெரிவித்துள்ளார்.