சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

524

ரியாத் (10 ஜூலை 2021): சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து ஆணையம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஃபைசர்-பயோன்டெக், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 10, 2021 வரை சவுதியில் மொத்தம் 19,262,679 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில், சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் சராசரியாக 166,826 கொரோனா தடுப்பூசி அளவுகளை வழங்கி வருகிறது.