விடுப்பில் இந்தியா சென்று சவூதி வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலத்தை செப்டம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவு!

1315

ரியாத் (17 ஆக 2021): சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்று திரும்ப வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலம் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் காலாவதியானவர்களின் குடியுரிமை அட்டை, (இக்காமா) காலமும் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை அடுத்து, சவுதி அரேபியா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானங்களை தடை செய்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் - கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

முன்னதாக, சவுதி மன்னர் சல்மான் காலாவதியான இகாமா, ரீ என்ட்ரி விசாக்கள் மற்றும் விசிட் விசாக்களின் கால அளவை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், ஆகஸ்ட் 31 வரை காலம் நீட்டிக்கப்படும் என்று ஜவாசத் பிரிவு தெரிவித்தது,

இதற்கிடையில், சவுதி பாஸ்போர்ட் ஆணையம் எதிர்பாராத விதமாக காலக்கெடு இப்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பு வெளியான நில மணிநேரங்களில் காலாவதியானவர்களின் இக்காமா புதுப்பிக்கப்பட்டதாக பலனடைந்த இந்தியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.