சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் சதவீதம் அதிகரிப்பு!

1864

ரியாத் (03 நவ 2021): சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சதவீதம் சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது.

சவூதி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில், சவூதி வாழ் வெளிநாட்டினர் 110.23 பில்லியன் ரியால்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அது ஆறு சதவீதம் உயர்ந்து 116.32 பில்லியன் ரியால்களாக உள்ளது.

அதே சமயம், வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் கடந்த ஆண்டை விட 36 சதவீதம் அதிகரித்து 47 பில்லியன் ரியால்களாக உள்ளது.