மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி-கத்தார் விமான சேவை!

343

ரியாத் (12 ஜன 2021): மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி கத்தார் நாடுகளுக்கு இடையேயான தினசரி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

நேற்று ரியாத் விமான நிலையத்தில் கத்தரிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் கத்தர் பயணிகளுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தாரில் உள்ள பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் கத்தாரிலிருந்து உம்ரா யாத்திரைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

ரியாத்தைத் தொடர்ந்து ஜித்தா, தம்மாம் உள்ளிட்ட பிற பிரதான நகரங்களுக்கும் கத்தாரிலிருந்து விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.