நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

Share this News:

ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் 33 நாடுகளுக்கு சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் விமான சேவையை தொடங்கவுள்ளதாக சவுதி கெஸட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் கொச்சி, மும்பை, டெல்லி ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே தற்போது விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா வைரஸ் பயண விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆம்ஸ்டர்டாம், பிராங்பேர்ட், லண்டன், மாட்ரிட், பாரிஸ் மற்றும் இஸ்தான்புல் மற்றும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், அடிஸ் அபாபா, அலெக்ஸாண்ட்ரியா, கெய்ரோ, கார்ட்டூம், நைரோபி மற்றும் துனிசியா மற்றும்  – டெல்லி, டாக்கா, குவாங்சோ, இஸ்லாமாபாத், ஜகார்த்தா, கராச்சி, கொச்சி, கோலாலம்பூர் லாகூர், மணிலா, முல்தான், மும்பை மற்றும் பெஷாவர்  மற்றும் மத்திய கிழக்கில் ஆறு இடங்கள் – அம்மன், அபுதாபி, பஹ்ரைன், பெய்ரூட், குவைத் மற்றும் துபாய். ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply