நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி!

1748

ரியாத் (08 ஆக 2021): புதிய கல்வி ஆண்டில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவிட் 19 பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பள்ளிகளில் காலை கூட்டங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது. மாணவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சிறப்பு வசதிகளை அமைக்க கல்வி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இதற்கிடையே, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை இம்மாதம் 22 ஆம் தேதி முதல் பணிக்கு வருமாறு கவ்லி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இம்மாதம் 29 முதல் மூத்த வகுப்புகளில் உள்ளவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றவர்களுக்கு மட்டுமே வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்புண்டு.அ