கொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்!

Share this News:

ஜித்தா (28 மே 2020): கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பல்லடத்தைச் சார்ந்த தமிழர் (வயது 53), 23-5-2020 அன்று சிகிச்சை பலனின்றி சவுதி அரேபியா, ஜித்தாவில் மரணமடைந்தார்.

அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ஜித்தா தமிழ் மாநில நிர்வாகிகள் ஊரடங்கின் போதும் முன்னின்று செய்தனர்.

இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்பித்து குறுகிய நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஒப்புதல்கள் பெறப்பட்டன.

27-5-2020 அன்று மாலை ஜித்தா சலேஹியா மையவாடியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேபோன்று மக்காவில் மாரடைப்பால் மரணம் அடைந்த செந்தலைப் பட்டினத்தை சேர்ந்தவரின் உடலும் இந்தியன் சோசியல் ஃபாரம் முயற்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News: