சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச் சலுகை பெற்றவர்களுக்கும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் கவரேஜுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.

சவூதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை அளித்துள்ள நிலையில், காஸ்வே ஆணையத்தின் உத்தரவு வந்துள்ளது.

தற்போது சவூதிக்குள் நுழைவதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் முறையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் PCR சோதனை முடிவு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (05 டிச 2022): அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...

உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள்...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப்...