கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானம் – வழியனுப்பிய தமுமுகவினர்!

Share this News:

ஜித்தா (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் சென்ற 151 தமிழர்களை தமுமுக தன்னார்வலர்கள் வழியனுப்பி வைத்தனர்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் ஹம்னா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜூதீன், ரமணா மற்றும் ஜித்தா தமுமுக நிர்வாகிகள் கீழை இர்பான், செல்வக்கனி, அப்துல் மஜீத் ஆகியோர் அனைத்து பயணிகளுக்கும் விமானத்தில் ஏறும் வரை உதவிகள் செய்தனர்.

உடல்நிலை குறைவான பயணிகளுக்கு உதவிட சென்னை விமான நிலையத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

மேலும் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாகான் தலைமையில் மமக பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், மமக பொதுச்செயலாளர் மதுரை கவுஸ், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் அலி ஆகியோர் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு உதவ தமுமுக தொண்டர்கள் அனைத்து விமான நிலையங்களிலும் களப்பணியில் உள்ளதும் குறிப்பிடதக்கது.


Share this News: