இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு திடீர் நிறுத்தம்!

1147

புதுடெல்லி (23 ஜூன் 2021): பயணத் தடை தொடர்பான தெளிவான அறிப்பு இல்லாததால், விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளன.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாகப் பெறுவதுடன், பயணம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் ஆன சான்றிதழை வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் இன்று முதல் துபாய் செல்ல அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

இதைப் படிச்சீங்களா?:  ஜித்தா பெருமழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இழப்பீடு!

ஆனால் விமான சேவை இன்று தொடங்கப்படுமா என்பது குறித்து எந்த பெரிய விமான நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

அதேவேளை பயணத்தடை முழுமையாக சரியாகாத வரையில் ஏர் இந்தியா விமானம் எந்த விமான நிலையத்திற்கும் பறக்கப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.