ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை!

Share this News:

துபாய் (02 ஜுலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் குடிமக்கள், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது.

விடுமுறைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில், டிப்ளமேட்ஸ், அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற வணிக நபர்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கனவே மேற்சொல்லப்பட்ட நாட்டினர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து செல்வதற்கும் தடை விதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், மற்ற வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், இரண்டு தடுப்பூசிகளையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply