இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

1426

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது.

இத் தடையை நீக்கியுள்ள அமீரகம், இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

ஆகஸ்ட் 5 முதல் இது அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில் விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன.

முதல்கட்டமாக, ஃப்ளை துபாய் தனது விமானச் சேவைக்கான ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளது. அதேவேளை, டிக்கெட்டுகளின் விலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.