சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

238

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது.

சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது.

இதைப் படிச்சீங்களா?:  லாக்டவுன் காலத்தில் சாதித்த மாணவி ஆமினா முஹம்மது - வீடியோ இணைப்பு!

இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. மேலும் கத்தார் உடனான அனைத்து தடைகளையும் நீக்கியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.