துபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

951

துபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன .

துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று விமான நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள், சுற்றுலா / வருகை விசாக்களில் துபாய்க்குச் செல்லும் இந்திய பயணிகளுக்கான பயண விதிமுறைகளை அறிவித்துள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை - பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய்க்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா / வருகை விசா வைத்திருப்பவர்களும் பயணத்திற்காக ஏற்றுக்கொள்ள செல்லுபடியாகும் தங்களது நாட்டிற்கு திரும்ப செல்லக்கூடிய டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும் . மேலும் பயணிகள் தங்களுடன் குறைந்தபட்சம் 2,000 திர்ஹம் தொகையும் வைத்திருக்க வேண்டி இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது

இதற்கிடையில், துபாயில் உள்ள இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய நுறுக்கணக்கான பணிகள் வருகை / சுற்றுலா விசா வைத்திருப்போருக்கான விதிமுறைகளை பின்பற்றாததற்காக அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.