இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவூதி அரேபியா வருகை!

448

ரியாத் (18 செப் 2022): இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக சவுதி அரேபியா வந்துள்ளார்.

அமைச்சர் பியூஷ் கோயல் ரியாத்தில் சவுதி அரேபிய வர்த்தக அமைச்சர் மஜித் அப்துல்லா அல் கசாபியை சந்தித்தார். இந்தியா-சவுதி இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - வாகனங்கள் மெதுவாக செல்ல உத்தரவு!

பியூஷ் கோயல் ஜுபைல் யாம்பு சவுதி ராயல் கமிஷன் தலைவர் காலித் அல்-சலீமுடன் கலந்துரையாடினார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பரஸ்பர ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்தும் இரு தரப்பும் விவாதித்தனர்.

ரியாத்தில் தங்கியுள்ள அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய சவூதி பொருளாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.