ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு!

Share this News:

ஜித்தா (29 மே 2020): ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் இயங்கும் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்திய தூதரகம் தொடர்பான பணிகள் (அவசர தேவைகள் தவிர) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரங்கு படிப்படியாக குறைக்கப்படவுள்ள நிலையில், இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான ஜித்தா ஹைல் சாலை VFS Global அலுவலகம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் இயங்கும்.

மேலும் அப்ஹா, யான்பு, தபூக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் ஜூன் 7 முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் காலை 08:30 முதல் மாலை 05:00 மணி வரை இயங்கும்.

அதேவேளை அலுவலகங்களுக்கு பாஸ்போர்ட் விசா தொடர்பான தேவைகளுக்காக செல்பவர்கள், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சவூதி ஆரோக்கிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். முகமூடி (mask), கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை அணிந்து செல்ல வேண்டும்.

மேலும், பாஸ்போர்ட், அட்டஸ்டேஷன் உள்ளிட்ட காரியங்களுக்கு முன் கூட்டியே முன் அனுமதி பெற வேண்டும். 920006139 என்ற எண்ணிலோ அல்லது info.injeddah@vfshelpline.com என்ற ஈமெயில் வழியோ முன் அனுமதி (Appointment) பெற வேண்டும். முன் அனுமதி பெற்ற பிறகே VFS Global அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

பாஸ்போர்ட் தேதி முடிந்தவர்களுக்கு அல்லது முடியும் தேதி நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவதவர்களுக்கு சவூதி அரசு அபராதம் உள்ளிட்ட விவகாரங்களில் கடுமை காட்டும் என்பதால் அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

தகவல் நன்றி : Jaleel Kannamangalam


Share this News: