வெளிநாட்டுப் பணியாளர்களின் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கும் குவைத் அரசு!

485

குவைத் (29 நவ 2020): “அறுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க வேண்டாம்” என குவைத் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை அமல்படுத்துவதன் மூலம், 70,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டுக்குள் குவைத்திலிருந்து, தத்தம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும்.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

குவைத் நாட்டின் வேலைவாய்ப்பு துறையில் உள்ளூர் மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குவைத் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.

இப் புதிய விதி 2021 ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.