சென்னை(24 ஜன 2017): போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பா.ஜ.க.தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை(24 ஜன 2017): சமூக வலைதளங்களில் தனது பெயரை தவறாக பயன்படுத்தப்பட்டதாக சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை(24 ஜன 2017): மாணவர்களின் போராட்டம் காந்திய வழியில் பெற்ற வெற்றி என்று தமிழ்எழுச்சிப்பேரவை தெரிவித்துள்ளது.

சென்னை(24 ஜன 2017): ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் போராட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் சில நிர்பயாக்கள் அமர்ந்திருந்ததை கண்டு நெகிழ்ந்தேன் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

சென்னை(24 ஜன 2017): ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் வாபஸ் பெறப்பட்டுள்ள சூழ்நிலையில் மெரினாவில் மட்டும் சுமார் 300 பேருடன் போராட்டம் தொடர்கிறது.

புதுடெல்லி(24 ஜன 2017): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை(24 ஜன 2017): சென்னை வடபழனியில் கலவரக்காரர்களை ஒடுக்க காவல்துறை வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை(24 ஜன 2017): ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்து வைத்த பிரபலங்கள் கைவிரித்துவிட கடைசி நேரத்தில் மாணவர்கள் நிற்கதியானதால் போராட்டம் வன்முறையில் முடிந்ததாக கூறப்படுகிறது.

சென்னை(24 ஜன 2017): ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டி ஆளுநரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

சென்னை(24 ஜன 2017): ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.