இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு பஹ்ரைனில் 4 இந்தியர்கள் பலி!

பஹ்ரைனில் 4 இந்தியர்கள் பலி!

பஹ்ரைனில் 4 இந்தியர்கள் பலிவளைகுடா நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனையொட்டி குளிரை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் மரணமடைந்தனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த 4 நபர்கள் பஹ்ரைனில் ஒரே அறையில் வசித்து வருகின்றனர். இரவு தூங்குவதற்கு முன்னர் காலி பெயின்ட் டிரம்மில் மரத்துண்டுகளை தீவைத்து தூங்கியுள்ளனர். மறுநாள் அவர்கள் வேலைக்கு வராததால் சென்று பார்த்தபோது மரணமடைந்தது தெரியவந்தது.

பெயிண்ட் டிரம்மில் தீ பற்ற வைத்ததால் ஏற்பட்ட விஷவாயு தாக்கி அவர்கள் மரணமடைந்ததுள்ளதாக தெரிய வருகிறது. சடலங்களை கைப்பற்றி பஹ்ரைன் நாட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: