துபாய் : துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் 15.02.2012 புதன்கிழமை காலை ரத்ததான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமினை கார்ஸ் முதுநிலை பொதுமேலாளர் சலீம் அன்சாரி துவக்கி வைத்தார். எண்பதுக்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று இனம், மதம், மொழி வேறுபாடின்றி ரத்ததானம் வழங்கினர்.
உயிர்காக்கும் சேவையில் தங்களது பங்களிப்பும் ஏதாவது ஒருவகையில்
இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்வதாக முகாமில் பங்கேற்றோர் தெரிவித்தனர். முகாமில் பங்கேற்றோருக்கு பழம் மற்றும் பழரசம் வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை உயரதிகாரிகளின் ஆதரவுடன் நலத்துறை அலுவலர் அப்துல் கனி செய்திருந்தார். இம்முகாம் துபாய் சுகாதாரத்துறையின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- முதுவை ஹிதாயத்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்!