துபாய் : சென்னையிலிருந்து தினமும் துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் (ஈகே 545 ) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 க்கு வந்து சேர்கிறது.
நேற்று(20.02.2012 திங்கட்கிழமை) காலை சென்னையில் இருந்து காலையில் சிறிது தாமதமாக புறப்பட்ட விமானம் காலநிலை காரணமாக மும்பையில் தரை இறக்கப்பட்டது.
பின்னர் சில மணி நேரத்திற்குப் பிறகு மும்பையில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு மாலை 5.57 வந்து சேர்ந்தது.
காலையில் 9.40 மணிக்கு புறப்படும் விமானம் என்பதால் பெரும்பாலோர் காலை 6.30 மணிக்கெல்லாம் சென்னை விமானநிலையம் சென்றிருப்பர்.
இதன்காரணமாக ஏறத்தாழ 10 மணி நேர பயணத்திற்குப் பின்னர் துபாய் வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். பெண்களும், குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.
- முதுவை ஹிதாயத்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
காலநிலையின் காரணமாக தாமதமாக வந்த சென்னை துபாய் எமிரேட்ஸ் விமானம்!