இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்தும் இல‌க்கிய‌ நிக‌ழ்ச்சி!

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்தும் இல‌க்கிய‌ நிக‌ழ்ச்சி!

ஜ‌ன‌வ‌ரி 28, துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்தும் இல‌க்கிய‌ நிக‌ழ்ச்சிதுபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் இன்று (28.01.2012 -சனிக்கிழமை) மாலை 7.30 மணிக்கு கராமா, சிவ்ஸ்டார் பவனில் இலக்கிய மாத இதழான தமிழ்த்தேரில் கனவு  மற்றும்  விடியல்  ஆகிய இரண்டு சிறப்பிதழ்கள் வெளியிடப்பட உள்ளன.

மாதம்தோறும் நடைபெறும் இந்த இலக்கிய விழாவில்… படைப்பாளர்கள் தங்கள் கவிதைகளை வழங்கிட‌வும், புதிய உறுப்பினர்களும் கவிதை ஆர்வலர்களும், தமிழ் நேசிப்பாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

கனவு, விடியல்  ஆகிய தலைப்புகளில் கவிதை மழை பொழிய..

அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

அலைகடல் தாண்டி அன்னைத்தமிழ் வளர்க்க நண்பர்கள் கூடிநின்றோம்!
அழகுதமிழில் கவிதைபடைத்து கவிஞர்கள் பாடுகின்றோம்!
அதனை நூலாய் தொகுத்து இதழ்கள் தருகின்றோம்!
ஆண்டுகள் பலவாய் தொடரும் அற்புதச் சேவைதனில்..
கனவு   விடியல்  என்னும்  தலைப்பில்  மலர்கின்றன!

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துபாய் கிரெஸண்ட் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் டி.ஏ. கலிஃபுல்லா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை கவிஞர் காவிரிமைந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன் மற்றும் கீழைராஸா ஆகியோர் செய்துவருகின்றனர்.  அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் முழுமையான ஆதரவில் தைத்திங்கள் கவிதை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு: +971 50 2519693 / kmaindhan@gmail.com

- முதுவை ஹிதாயத்

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: