இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்!

இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்!

இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்"இந்தியாவில் இஸ்ரேல் கார் குண்டுவெடிப்புக்கு ஈரான்தான் காரணம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம் சுமத்தியுள்ளார்.

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் உயிரிழக்கவில்லை.

"வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர்" என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இருநாட்களுக்கு முன்னர், ஜார்ஜியா தலைநகர் பிலிசியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துத் தீபற்றி எரிந்தது. இதில் 4 பேர் காயம் அடைந்தாலும் எவருக்கும் உயிரிழிப்பு இல்லை.

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான்மீது குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று அவர் கூறும் போது,

"இப்போது ஈரான்தான் உலக நாடுகளுக்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. ஜார்ஜியாவில் காரில் வெடிகுண்டு வைத்தது, இந்தியாவில் இஸ்ரேல் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதற்கு ஈரான்தான் காரணம். ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் உலகளவில் தீவிரவாத ஒழிப்பு பணியில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இஸ்ரேல் தொடர்ந்து இணைந்து பணியாற்றும்."

என்று கூறினார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: