தம்மாம் : கேரளத் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவரான மார்கோஸ் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு கதிப் ஜெயிலில் வெள்ளியன்று சிறை வைக்கப்பட்டது அங்குள்ள மலையாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்மாமில் இந்தியாவின் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு மலையாள அமைப்பு ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மார்கோஸ் அதற்கான அனுமதியை சரியாக பெறாததாலேயே கைது செய்யப்பட்டதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி சவூதியில் இயங்கும் பல்வேறு மலையாள குழுக்களுக்கு மத்தியிலுள்ள மோதலின் காரணத்தால் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பை பிடிக்காத அமைப்பை சார்ந்தவர்கள் காவல்துறைக்கு போட்டு கொடுத்ததாலேயே இக்கைது நடைபெற்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மார்கோஸ் பின் விடுவிக்கப்பட்டார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சவூதியில் கைது செய்யப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed