இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு குவைத்தில் முப்பெரும் நிகழ்வுகள்!

குவைத்தில் முப்பெரும் நிகழ்வுகள்!

குவைத் : குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic), குவைத் தேசிய தினத்தையொட்டி முப்பெரும் நிகழ்வுகளை வரும் 24.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃகைத்தான் கே-டிக் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் நடத்த இருக்கிறது என K-Tic பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

"திருக்குர்ஆனை திருத்தமாக ஓதுவோம் வாருங்கள், வாங்க.. பேசிப் பழகலாம் எனும் ஓர் எளிய மேடைப்பயிற்சி, என்னைக் கவர்ந்தார் பெருமானார் எனும் தலைப்பில் சிறப்புப் பேச்சுப் போட்டி உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

பேச்சுப்போட்டியில் வயது, நாடு, மத வேறுபாடின்றி ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு தனியிடமும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம்.

Hotline : (+965) 97 87 24 82

Emails : q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

Official Website : www.k-tic.com

Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

Google Group : http: //groups.google.com/group/q8tic"

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- முதுவை ஹிதாயத்

Comments  

 
0 # அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ 2012-02-21 17:37
ஸலாம்...

'இந்நேரம்' வரலாற்றில் முதல்முறையாக நமது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செய்தியை வெளியிட்டமைக்கு சங்கத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ,
பொதுச் செயலாளர், K-Tic
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # செம்புலி 2012-02-21 21:36
//நமது குவைத்// இன்னும் கொஞ்சநாள்ல தெரியும் நமது குவைத் யாருக்கு சப்போர்ட் பண்ணப்போகுதுன்னு. இந்திய குடியுரிமையையுடன் அரசு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பிழைக்கச்சென்ற தேசத்தை "நமது" என்று சொந்தம் கொண்டாடுவது வன்மையாகக்கண்டிக்கத் தக்கது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ 2012-02-21 21:45
அய்யா செம்புலி அவர்களே!

நமது என்று நான் குறிப்பிட்டது குவைத் நாட்டையல்ல... நான் பொதுச் செயலாளராக இருக்கும் எங்கள் சங்கத்தைப் பற்றித்தான்... அதாவது நமது 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க'த்தின்.... என்று பொருள்.

அதனால் சரியாக படிக்காமல் கண்டிக்கத்தக்கது என்று கருத்திட்ட தங்களை கண்டிக்க நான் விரும்பவில்லை.

மனிதன் அவசரக்காரன்தான் என்பதை புரிந்து வைத்திருப்பவன் நான்.

நன்றி!

தொடர்ந்து அனைத்து படைப்புகளுக்கும் முழுமையாக படித்து, அவற்றை உள்வாங்கி கருத்திடுங்கள்.

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ,
பொதுச் செயலாளர், K-Tic
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # செம்புலி 2012-02-22 01:44
பாகவி பாய்,

நமது குவைத் தமிழ் சங்கம் என்பதை நமது தமிழ்சங்கம் (குவைத்) என்று எழுதியிருந்தால் நமது கண்டனத்திற்கு அவசியமே இல்லை. தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெயருடன் பாகவி என்று ஜாதிப்பெயரைச் சேர்ப்பது ஏன்?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ 2012-02-22 11:06
அய்யா செம்புலி அவர்களே!

தாங்கள் மீண்டும் மீண்டும் தவறிழைப்பதாக எனக்குப் படுகின்றது.

காரணம், ஓர் அமைப்பின் பெயரை நமது விருப்பத்திற்கேற்ப சுருக்கவோ, நீட்டவோ முடியாது. இந்த அமைப்பின் முழுப் பெயர் "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்" (தமிழில்) - Kuwait Tamil Islamic Committee (ஆங்கிலத்தில்) சுருக்கமாக K-Tic / கே-டிக் என்று அழைப்பர்.

விளக்கம் போதுமா?

அதனால, செம்புலி அய்யா அவர்கள் எந்தச் செய்தியையும் முழுவதுமாக படித்து விட்டு, அது குறித்து தீர சிந்தித்து விட்டு, பிறகு தங்கள் கருத்துக்களை வெளியிடுவது நலம் என்பது என் கருத்து.

நன்றி!

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ,
பொதுச் செயலாளர், K-Tic
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ 2012-02-22 11:07
அய்யா செம்புலி அவர்களே!

அப்புறம் "பாகவீ" என்பது ஜாதிப்பெயர் என்று தங்களுக்கு அறிவித்துக் கொடுத்த அறிவாளி(!) யார்? என்று தெரிந்து கொள்ள ஆசை.

அரபுக்கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் பட்டதாரிகள் தங்கள் பெயருக்கு பின்னால் அக்கல்லூரியின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் இதுபோன்ற பெயர்களை இணைத்துக் கொள்வர்.

அந்த வகையில் நான் தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி என்று புகழ்பெற்ற வேலூரில் அமைந்திருக்கும் "அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்" அரபுப் பல்கலைக்கழகத்தில் படித்து "மவ்லவீ" என்ற பட்டத்தை பெற்றவன்.

அதனால் என் பெயருக்கு பின் "பாகவீ" என்று வருகிறது.

இந்த விளக்கமும் போதுமா?

அதனால, செம்புலி அய்யா அவர்கள் எந்தச் செய்தியையும் முழுவதுமாக படித்து விட்டு, அது குறித்து தீர சிந்தித்து விட்டு, பிறகு தங்கள் கருத்துக்களை வெளியிடுவது நலம் என்பது என் கருத்து.

நன்றி!

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ,
பொதுச் செயலாளர், K-Tic
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # செம்புலி 2012-02-22 12:58
அய்யா கலீல் பார்கவி,

தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்று நீங்களே குறிப்பிட்டுவிட்டு அரபுப் பல்கலைக்கழகம் என்றும் எழுதியுள்ளீர்களே! கல்லூரியா பல்கலைக்கழகமா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.

அடுத்து வே பா க தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி என்றால்,பழமை வாய்ந்த காரைக்குடி அழகப்பா,சிதம்பரம் அண்ணாமலை, சென்னை பச்சையப்பா,சென்னை மாநிலக்கல்லூரி,மதுரை தியாகராயர் கல்லூரி,ஆந்திராவின் உஸ்மானியா போன்றவை இதன் பிள்ளை கல்லூரிகளா என்பதையும் விளக்குவீர்களா?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # செம்புலி 2012-02-22 12:59
நாடார்,செட்டியார்,கோணார்,ஐயர், ஐயங்கார் என்று பெற்றோர் வைத்த பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்பவர்களும் தங்களது சாதிய அடையாளங்களை பெயரோடு ஒட்டிக்கொண்டு அழகு பார்க்கிறார்கள். மற்றவர்களிடமிருந்து தங்கள் சாதியை வேறுபடுத்திக்காட்ட இந்த அடையாளம் அவர்களுக்கு அவசியமாக உள்ளது. ஆனால், இசுலாமியர்களுக்கு அத்தகைய அடையாளங்கள் அவசியமில்லை என்றே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்களைப் போல் அரபு கல்லூரி & பல்கலைக்கழகத்தில் மெத்தப் படித்த அறிவாளிகள் சொல்லியே இந்த பெயர் காரணம் தெரிந்தது. வேலூர் சிறையிலிருக்கும் பலர், சிறையிலிருந்தபடியே படித்து பட்டம் பெறுகிறார்கள். அவ்வாறு படித்தவர்களுக்கு என்ன பட்டத்தைப் பெயருக்குப்பின்னால் போட்டுக்கொள்வது? "கைதியீ" என்று போடாமலிருந்தால் சரி.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # HASSANAR 2012-02-22 13:10
Br.Khaleel Ahamed should not encourage such suffixes with name which promote self-glorification which is against islamic principle. As a well known scholar, he should practice and be an example for others. What Mr.Sempuli said is correct. Being a muslim and practicing a Islam is good enough to identify oneself from others.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ 2012-02-22 13:51
அய்யா செம்புலியை விடுங்கள... அவர் ஆரம்பத்திலிருந்தே தலைப்பை புரிந்து கொள்ளாமல் புதிது புதிதாக தன் ஆராய்ச்சிகளை எடுத்து வைக்கின்றார். அவர் செம்புலியா? இல்லை கரும்புள்ளியா என்பதை மக்கள் விளங்கிக் கொள்வர்.

அதுசரி ஹஸன் பாய்! நான் வைத்துள்ள கருத்துகள் எந்தவிதத்தில் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்று கொஞ்சம் தெளிவாக விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அப்புறம்... இது பொதுவான தளம்.. தேவையில்லாத விவாதங்கள் புரிவது இங்கு நல்லதல்ல.. வேண்டுமானால் தங்களின் சந்தேகங்களை எனக்கு அனுப்பி வையுங்கள். நாம் நம்முடைய கருத்துக்களை அழகிய முறையில் பரிமாறிக் கொள்வோம்.

என்ன நான் சொல்றது சரிதானே!

நன்றி!

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ,
பொதுச் செயலாளர், K-Tic
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: