இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு சவூதி: போதைமருந்து பாகிஸ்தானிக்கு மரணதண்டனை!

சவூதி: போதைமருந்து பாகிஸ்தானிக்கு மரணதண்டனை!

போதை மருந்துகள் கடத்துவோருக்கு மரணதண்டனை என்று உலகில் பலநாடுகளும் விதித்துள்ளன. அவ்வகையில் கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவும் ஒன்று.

பெருமளவில் ஹெராயின் கடத்தியதாக சல்மான்கான் தாஜ்முகமது என்கிற அந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டிருந்தார். சவூதி  நீதிமன்றத் தீர்ப்புப்படி அவருக்கு மரணதண்டனை கிழக்கு மாகாண தலைநகர் தம்மாமில் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் இவ்வாண்டு 2012ல் சவூதியில் மரணதண்டனைக்குள்ளானோர் எண்ணிக்கை ஐந்தாகியது.

வன்புணர்வு, கொலை, மதநிந்தனை, ஆயுதக்கொள்ளை, போதை மருந்துகடத்தல் ஆகிய குற்றங்களுக்காக சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த 2011 ல் மட்டும், சவூதியில் 79 மரணதண்டனைகள் விதிக்கப்பட்டதாக அம்நெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை தெரிவிக்கிறது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: