இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!

துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!

துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!துபாய் : துபாயில் ஐக்கிய அர‌பு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 138 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி  17.02.2012 வெள்ளிக்கிழ‌மை "விளையாட்டு தினம்" ஆக துபாய் முஸ்ரிப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து.

செல்வி. அலமு கண்ணன் இறைவணக்கம் பாட, செல்வன் ராஜேஷ் ராமநாதனின் குறளமுதம் முழங்க, செல்வி சுபஸ்ரீ மணிகண்டன் & அனுஸ்ரீ மணிகண்டன் சங்கப்பாடல் இசைக்க விழா இனிதே தொடங்கியது.

துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!

சங்க செயலாளர் திரு.KT.முத்துராமன் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். சங்க தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் - தலைவர் உரை ஆற்றினார்.  "உன்னை நீ சோதித்து பார்" என்ற தலைப்பில் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் BMI  பரிசோதனை செய்யப்பட்டு "Fitness  First" குழுவின் மூலம் உடற்பயிற்சியும் அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

குழந்தைகளுக்கு மரம் வளர்க்கும் எண்ணத்தை வலியுறுத்தி "மரம் வளர்ப்போம்" எனும் விளையாட்டும், "நில் கவனி செல்" எனும் விளையாட்டும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. வாலிபர்களுக்கு "சகலகலா வல்லவன்" எனும் தொடர் விளையாட்டும் "ராஜநடை" எனும் வேடிக்கை விளையாடும் அனைவரையும் நகைசுவையில் ஆழ்த்தியது. பெண்களுக்கான "பந்து பற பற" எனும் விளையாடும், தம்பதியர்களுக்கான "பெப்ரவரி 14 " விளையாட்டும் மிகச்சிறப்பாக நடை பெற்றது.துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!

நம் தமிழர்களுக்கே உரித்தான விளையாட்டான "உரி அடி" விளையாட்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து உறுப்பினர்களும் விருப்பமுடன் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில், வந்திருந்த அனைவரையும் நான்கு குழுக்களாக பிரித்து குளுவிளையாட்டுக்கள் நடைபெற்றது.

கூட்டமைப்பின் கனி இதழான "பெட்டகம்" எனும் வைர ஓலை - 2 வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இக்கூட்டமைப்பின் முக்கிய நோக்கமான திருமண மற்றும் கல்வி உதவிக்காக வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விண்ணப்பங்களுக்கும் உதவி செய்வதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை செயலாளர் திரு O.RM.O.ராமநாதன் நன்றி உரை தெரிவிக்க விழா மாலை 5  மணியளவில் இனிதே நிறைவேறியது.

- முதுவை ஹிதாயத்

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: