துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 138 வது கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை 17.02.2012 அன்று துபாய் முஸ்ரிப் பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது என செயலாளர் கதி. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் வந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு கலந்துரையாடலை சிறப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
138-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியின் துவக்கமாக அலமு கண்ணன் இறைவணக்கம் பாடுகிறார். குறளமுதம் எனும் தலைப்பில் ராஜேஷ் ராமநாதனும், சங்கப்பாடல் எனும் தலைப்பில் சுபஸ்ரீ மணிகண்டன் மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரும் நிகழ்வினை வழங்குகின்றனர்.
தலைவர் உரையினை ரமேஷ் ராமநாதனும், சங்க செயலாளர் கதி .முத்துராமன் வரவேற்புரை வரவேற்புரையினையும் வழங்குகின்றனர்.
மேலும் உன்னை நீ சோதித்துப்பார்" (BMI) , உடற்ப்பயிற்சியும் உத்வேகமும்" (Fitness First) சங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட தலைப்புகளில் உரைகள் வழங்கப்பட இருக்கின்றன.
மரம் வளர்ப்போம், நில் கவனி செல், சகல கலா வல்லவன், ராஜநடை, பந்து பற பற, ஊட்டிவிடும் உறவு,பிப்ரவரி 14, உரி அடி, ஆடுகளம், பிங்கோ எனும் தலைப்புகளில் ஆண்கள், பெண்கள், தம்பதியர், குழந்தைகள் என பல்வேறு பிரிவினருக்கு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு 055-9006365 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Website : http://nagarathars.com
Facebook : http://www.facebook.com/Nagarathars
- முதுவை ஹிதாயத்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed