துனீஷியாவில் விதையாகி எகிப்தில் உரமிட்டு வளர்க்கப்பட்ட 'அரபு வசந்தம்'எனப்படும் முல்லைப் புரட்சி டமாஸ்கஸ்ஸில் மையங்கொண்டுள்ளது.
சிரிய அதிபர்பஷர் அல் ஆஸாத் பதவி விலகக் கோரி புரட்சியாளர்களின் படையும் பொதுமக்களும் ஏறத்தாழ ஒரு வருடக் காலமாகப் போராடிவரும் நிலையில், எதிர்ப்பாளர்களைவன்மையாக ஒடுக்கிவருகிறார் சிரிய அதிபர். சிரிய அதிபரின் போக்குக்கு அரபுலீக் உள்ளிட்ட அமைப்புநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து தத்தமது தூதர்களையும் திரும்பப் பெற்றுள்ளன.
போராட்டக் குழுவினர் வலுவாக உள்ள பகுதிகளில் இராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் இராணுத்தினர் பீரங்கிமற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இங்கு வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.சிரியாவில் மக்கள் போராட்டம் தொடங்கி இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனவென்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மட்டுமே 100 பேரை கொன்று இருப்பதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல சபாதனி என்ற நகரிலும் கண்மூடித்தனமானதாக்குதல்கள் நடந்து வருகின்றன. அரபு நாடுகளும் மற்ற அமைப்புகளின் உறுப்பினர் நாடுகளும் சிரியவிவகாரத்தில் தங்களின் கடும் கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட கண்டனத்தீர்மானத்தை, சிரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை இணைந்து தங்களின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சிரியா: படுகொலைகள் தொடர்கின்றன.