இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: சினிமா நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: நடிகர் வடிவேலு!

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: நடிகர் வடிவேலு!

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: நடிகர் வடிவேலு!தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும், நடிகர் வடிவேலுவிற்கும் கார் நிறுத்துவது தொடர்பாக முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.. இதையடுத்து விஜயகாந்த்தை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு இரு கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் பரவியது.

இதுகுறித்து வடிவேலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "உடல் நலம் குன்றி இருக்கும் எனது தாயை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். என் தாயார் விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். என்னுடைய முக்கியத்துவம் எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்

இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகள் மூலம் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது." என்றார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: