உடும்பன் என்ற படம் உடும்பு இனத்தைக் கொடுமைபடுத்தி எடுத்திருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து அப்படத்தைத் திரையிட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மாடர்ன் சினிமா சார்பில் s. ஜெகநாதன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் உடும்பன். அடுத்தமாதம் வெளிவர தயார் நிலையிலுள்ள இப்படத்தைத் திரையிட தடைவிதிக்க வேண்டுமென கோரி சென்னை சூளையைச் சார்ந்த செல்வராஜ் என்பவர், வனவிலங்கு ஆர்வலர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில்,
"அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைபடுத்தி எடுக்கப்பட்டுள்ள உடும்பன் திரைப்படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி லக்ஷ்மிகாந்தன், உடும்பன் படத்தைத் திரையிட தடை உத்தரவு பிறப்பித்தார். இத்தடை உத்தரவு குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜெகநாதன் கூறும்போது,
"நங்கள் படபிடிப்பிற்கு முன்னால் முறையாக வனவிலங்கு நலவாரிய துறையிடம் (ANIMAL WELFARE BOARD OF INDIA)அனுமதி பெற்று நடத்தியுள்ளோம். மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு (CENSOR BOARD ) U சான்றிதழும் வழங்கியுள்ளது. ஆகவே முறையாக எல்லா ஆவணங்களையும் செலுத்தி, இந்தத் தடை உத்தரவை சட்டபூர்வமாக அகற்றி திட்டமிட்டபடி படத்தைத் திரையிடுவோம்" என்று கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
உடும்பன் படம் திரையிட தடை உத்தரவு!