இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா 20 வருடங்களாக இந்தியாவில் : பாகிஸ்தான் உளவாளி கைது

20 வருடங்களாக இந்தியாவில் : பாகிஸ்தான் உளவாளி கைது

20 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளியை டெல்லி காவல்துறை   கைது செய்துள்ளது.

39 வயதுடைய கம்ரான் அக்பர் என்னும் பெயருடைய அந்த நபர், கடந்த 1992 லிருந்து கொல்கத்தாவில் தங்கியிருக்கிறான். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கொல்கத்தாவிலேயே ஓர் உள்ளூர் பெண்ணையும் மணம் முடித்திருக்கிறான்.

தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லி தொடர்வண்டி நிலையத்தில் கொல்கத்தா செல்ல ஆயத்தமாக இருந்த அக்பரை டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர் என்று டெல்லி  காவல்துறை குற்றப் பிரிவு ஆணையர் அசோக்சந்த் தெரிவித்துள்ளார்

இந்திய இராணுவம் குறித்த மிக முக்கிய  ஆவணங்களை டெல்லி வந்து பெற்றுக்கொண்டு, பாக்கிஸ்தானுக்கு அதைக் கடத்த இருந்த நிலையில் இந்த உளவாளி பிடிபட்டுள்ளான்.

இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments  

 
+4 # B A B U 2012-02-22 11:44
Somewhat I read somewhere

சில கேள்விகள்:

1) கல்கத்தாவில் வசிக்கும் அக்பர், இந்திய பாதுகாப்பு அமைச்சின் ரகசிய ஆவணத்தை டில்லியில் எப்படி பெற்றார்?

2) பாதுகாப்பு அமைச்சிலோ, ராணுவத்திலோ உள்ள யாராவது இந்த ஆவணத்தை கொடுத்தார்களா? அப்படியானால், அந்த நபர் தொடர்பான விபரங்கள் ஏன் வெளியாகவில்லை?

3) 1997-ல் இருந்து இப்போதுவரை 15 ஆண்டுகளாக அக்பர் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆக்டிவ் உளவாளியா? ஸ்லீப்பிங் செல்லா? (அடித்துச் சொல்கிறோம்… எந்தவொரு MI-யிலும், நேரடி ராணுவ அனுபவமற்ற ஒரு வாக்-இன் ரெக்ரூட்டை, 15 வருடங்களாக ஸ்லீப்பிங் செல்லில் வைத்திருக்க மாட்டார்கள்)
தமாஷ் பண்ணாதீங்க சாப்.
(To be continued)
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # B A B U 2012-02-22 11:49
4) இவரது கைகளில் இருந்தது ரகசிய ராணுவ ஆவணங்கள் (classified military documents) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இது பெரிய விவகாரம். இந்திய ராணுவ உளவுத்துறை (DIA) அல்லது றோ இதில் தொடர்பு படாமல், டில்லி போலீஸ் கிரைம் டிவிஷன் இதை ஹான்டில் செய்கிறதா?

5) இந்த ஆவணங்களை ரிட்ரீவ் பண்ணுவது இவர்கள் சொல்வது போலவே, பாகிஸ்தானி ராணுவ உளவுத்துறை ஆபரேஷன் என்று வைத்துக் கொள்வோம். எடுத்த ஆவணத்தை கையடக்க ஸ்கேனரில் ஸ்கேன் செய்து, உடனடியாகவே ஒரு வெளிநாட்டு சேர்வரின் எஃப்.டி.பி.யில் போட்டு அனுப்பிவிட முடியும். (இ-மெயில் ட்ராக் பண்ணலாம்)

அப்படிச் செய்யாமல், கொல்கத்தாவில் இருந்து ஒருவரை டில்லி வரச்சொல்லி, அவரது கையில் ஆவணத்தை ஒரு கவரில் போட்டு கொடுத்து, கொல்கத்தா ரயிலைப் பிடிக்க அனுப்பி… தமாஷாக இல்லையா?

மொத்தத்தில், இவர்கள் நிஜமாக எதையோ பிடித்திருந்தால், அது நிச்சயமாக இவர்கள் வெளியே சொல்லும் ரயில்வே ஸ்டேஷன் கதை அல்ல.

தமாஷ் பண்ணாதீங்க சாப்.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # Siraj 2012-02-22 22:34
ஹ்ம்ம்ம் .... சாதாரண மக்களுக்கு தெரிகிற விஷயம் கூட டெல்லி காவல்துறைக்கு தெரியல.

கண்டிப்பாக இது நம்பும் படியாக இல்லவே இல்லை.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # முஸ்தபா 2012-02-23 00:38
Quoting Siraj:
ஹ்ம்ம்ம் .... சாதாரண மக்களுக்கு தெரிகிற விஷயம் கூட டெல்லி காவல்துறைக்கு தெரியல.

கண்டிப்பாக இது நம்பும் படியாக இல்லவே இல்லை.

நன்றாக விசாரியுங்கள். கம்ரன் அக்பர் என்ற பெயரில் rss காரனாக இருக்கப்போகிறான்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sahibraa 2012-02-23 18:12
நன்றாக விசாரியுங்கள். கம்ரன் அக்பர் என்ற பெயரில் rss காரனாக இருக்கப்போகிறான் mast want re check


Read more about 20 வருடங்களாக இந்தியாவில் : பாகிஸ்தான் உளவாளி கைது [3256] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: