இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா பிரதமர் வேட்பாளர்: பா.ஜ.க-வில் நால்வர் போட்டி!

பிரதமர் வேட்பாளர்: பா.ஜ.க-வில் நால்வர் போட்டி!

பிரதமர்  வேட்பாளர்:  பா.ஜ.க-வில் நால்வர் போட்டி!இந்தியாவின் 16 வது மக்களவை தேர்தல் 2014 ஆண்டு நடக்கும் இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் பதவி குறித்தான போட்டி அதிகரித்துள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பாரதீய ஜனதா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதையடுத்து பாரதீய ஜனதா தலைவர் அத்வானி நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டார். இதன் மூலம்  தனது நீண்ட நாள் கனவான பிரதமர் பதவி அடைய முடிவு செய்துள்ளார்.

குஜராத்தில்  முதல்-அமைச்சராக இருந்து வரும் நரேந்திர மோடியும், பிரதமராகும் எண்ணத்தில்,  கோத்ரா உள்ளிட்ட குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சத்பாவனா மிஷன்  என்ற பெயரில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இவர்கள் இருவர் தவிர பாரதீய ஜனதா முன்னணி தலைவர்கள் மேலும் சிலரது பெயரும் பிரதமர் வேட்பாளருக்கு அடிபடுகிறது.

தற்போது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சுஷ்மா சுவராஜ், டெல்லி மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அருண்ஜெட்லியும் பிரதமர் வேட்பாளர் போட்டி களத்தில் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பாரதீய ஜனதாவில் பிரதமர் வேட்பாளருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி நிதின் கட்காரியிடம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் பதவிக்கு போட்டியிட தகுதியான தலைவர்கள் நிறைய உள்ளனர். அத்வானி, நரேந்திரமோடி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் நடவடிக்கையை பொறுத்து நாங்கள் பிரதமர் வேட்பாளரை சரியான நேரத்தில் முடிவு செய்வோம்" என்றார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: