நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று 4-ம் கட்ட தேர்தலில் பரூக்காபாத் லக்னோ, பதேபூர் ரேபேரேலி, கனுகுக், சித்ரா கூட், உள்பட 11 மாவட்டங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. இன்றைய தேர்தலில் 967 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று நடந்த 4வது கட்ட சட்டசபை தேர்தலில் 57 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்றைய வாக்குப்பதிவு பொதுவாக அமைதியாக நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் ஆலம்பாக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அப்போது, அங்கு தேர்தல் அதிகாரியாக பணியில் இருந்த ரஜ்ஜன் லால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
எனினும், இதன் காரணமாக பாதிப்பு ஏதும் இன்றி, இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
உ.பி-யில் நான்காம் கட்ட இடைத்தேர்தல்: 57 சதவீதம் வாக்குப்பதிவு!