இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இம்மாதம் 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.

மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.

இந்த பிரச்சினை தொடர்பாக,  தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா,  பிரதமர் மன்மோகன் சிங்குக்கு  ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “பொது அமைதி, காவல்துறை ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை.

எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி,  பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக், பஞ்சாப் முதல்-அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்,  குஜராத் முதல்-அமைச்சர் நரேந்திரமோடி,  இமாசலபிரதேச முதல்-அமைச்சர் பிரேம்குமார் துமால், மத்திய பிரதேச முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநில முதல்-அமைச்சர்கள் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியும், மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments  

 
0 # SYED 2012-02-19 18:27
அவால் பாபாதி ஒப்புக்கொல்ல மாட்டால்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: