இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா

இந்திய செய்திகள்

சீனாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்திய-அமெரிக்க கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

தெற்கு சீன கடலில் இந்திய எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் பெட்ரோல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்தது. இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா, தென்சீனக் கடல் பிராந்தியம் எந்த நாட்டுக்கும் சொந்தமானதல்ல என்றும் எந்தநாடும் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என்றும் ஆஸியான் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

டைம் பத்திரிக்கையின் வாக்கெடுப்பு - அதிக 'No' பெற்று மோடி முதலிடம் !

பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திய 2012ஆம் ஆண்டின் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவு செய்யும் வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

உன் மிரட்டல் இங்கு பலிக்காது-- சீனாவுக்கு இந்தியா எதிரடி

பெங்களூரு : தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா எண்ணெய் ஆய்வு செவதை எதிர்க்கும்  சீனாவின் மிரட்டலுக்கு எதிரடி  கொடுத்துள்ளது  இந்தியா. சீனா தனக்குரிய பகுதி எனச்சொல்வது, உலகின் பொதுச் சொத்து. அங்கு எண்ணெய் ஆய்வு நடத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்திய ராணுவ ஆயுதக் கையிருப்பு 10 நாட்கள் மட்டுமே? - அதிர்ச்சியில் மத்திய அரசு

இந்திய ராணுவ ஆயுதக் கையிருப்பு 10 நாட்கள் மட்டுமே? - அதிர்ச்சியில் மத்திய அரசுதொடர்ந்து வெளியாகும் ராணுவ ரகசியங்களால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய ராணுவம் வசமுள்ள ஆயுதங்கள் 10 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

கிருஷ்ணர் வேடத்தில் நரேந்திர மோடி!

கிருஷ்ணர் வேடத்தில் நரேந்திர மோடி! சமீபத்தில் டைம் பத்திரிக்கை உலகின் சக்திவாய்ந்த 100 பிரபலங்களை பட்டியலிட்டிருந்தது. அந்த பட்டியலில் குஜராத் இனப் படுகொலைகள் மூலமாக பிரபலமடைந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

அரசின் காப்பகத்தில் வன்புணர்வு செய்யப்பட்ட அனாதை சிறுமிகள்

அலகாபாத் : வேலியே பயிரை மேய்வது போன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. அனாதை குழந்தைகளுக்காக அரசே நடத்தும் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை அங்கு பணிபுரியும் பியூனே வன்புணர்வு செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நகைக்கடை உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்

புது தில்லி : தங்கத்தின் மீது பட்ஜெட்டில் விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை குறைக்க கோரி நகைக்கடை உரிமையாளர்கள் நடத்திய கடையடைப்பு போராட்டம் பிரணாப் முகர்ஜியின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

பாலகனை அடித்ததாக பள்ளி ஆசிரியை மீது வழக்கு!

கையெழுத்து சரியில்லை என்ற காரணத்திற்காக, மழலை வகுப்பு மாணவனைத் தாக்கியதற்காக பள்ளி ஆசிரியை ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு - பெற்றோர் கொலை - பெண் கைது


Young girl arrested killing parentsகாதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர் கொலையுண்ட வழக்கில் 22 வயது இளம் பெண் ஒருவரை மே.வங்க மாநில காவல்துறை  கடந்த புதன் இரவு கைது செய்துள்ளது.

ரூ.32,000 கோடி மதிப்புள்ள வக்ஃப் நிலத்தில் அரசு முறைகேடு!

ரூ.32,000 கோடி மதிப்புள்ள வக்ஃப் நிலத்தில் அரசு முறைகேடு!

ஹைதராபாத்: ஆந்திர வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான 1654 ஏக்கர் நிலம் முறைகேடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பளித்துள்ளது.

”சொந்தக்கட்சியினர்தான் எதிரி” - எடியூரப்பா

எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களை விட சொந்தக் கட்சியினர்தான் தமக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் - தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ராணுவப்புரட்சியா? தளபதி வி.கே.சிங்

இந்தியாவில் ராணுவப்புரட்சியா? தளபதி வி.கே.சிங்காட்மாண்டு: இந்தியாவில் இராணுவ புரட்சிக்கு முயற்சி நடந்ததாக சமீபத்தில் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ராணுவ தளபதி போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீது கட்டுக்கதைகளை கூறுவது கண்டனத்திற்குரியது  மேலும் இச்செய்திகள் அடிப்படையில்லாததும் முட்டாள்தனமானதுமாகும் என ராணுவ தளபதி வி.கே.சிங் கூறியிருக்கிறார்.

பணிந்தார் பட்நாயக் - மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட 27 பேர் விடுதலை

பணிந்தார் பட்நாயக் -  மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட 27 பேர் விடுதலைஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும், இத்தாலி நாட்டவரையும் மீட்க சிறையில் உள்ள மாவோயிஸ்ட்கள் உட்பட 27 பேரை விடுவிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டாப் 100 தலைவர்கள்; மோடியின் மோசடி!

டாப் 100 தலைவர்கள்; மோடியின் மோசடி!அஹ்மதாபாத்: பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திவரும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் தற்போதைய வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடி மோசடி செய்திருப்பதாக  குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.

2ஜி வழக்கு- ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி வலுக்கிறது

2ஜி வழக்கு- ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி வலுக்கிறது2ஜி வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நெருக்கடி வலுக்கிறது. இவ்வழக்கில் 2 வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை லாகூர் வந்து என்னை பாருங்கள் : அமெரிக்காவை கிண்டலடிக்கும் லஷ்கர் தலைவர்

ராவல்பிண்டி : மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் தொடர்புடையவர் என்று இந்தியாவில் தேடப்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதின் தலைக்கு 10 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா விலை வைத்தது. அதற்கு தன்னிடம் நேரிடையாக பணம் கொடுக்குமாறு அமெரிக்காவை கிண்டலடித்துள்ளார் ஹபீஸ் சையத்.

பத்ம விருதுகள்-ஜனாதிபதி வழங்கினார்

பத்ம விருதுகள்-ஜனாதிபதி வழங்கினார்பல்வேறு துறைகளை சேர்ந்த 109 பேருக்கான மத்திய அரசின் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் இன்று வழங்கினார்.

டெல்லியை நோக்கி ராணுவம்? பிரதமர் மறுப்பு

டெல்லியை நோக்கி ராணுவம்? பிரதமர் மறுப்புகடந்த ஜனவரி மாதம் டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்ததாக வந்துள்ள செய்தியை பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் மறுத்துள்ளனர்.

கப்பலில் தப்பிய காதல் ஜோடியை விமானத்தில் தொடர்ந்த பெற்றோர்

அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட்.அவரது 18 வயது மகள் லைலா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). நெல்லையை சேர்ந்த முத்து நிவாஸ்அலி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் கசிந்ததும் பெற்றோர் கண்டித்தனர். கடந்த 6 மாதங்களாக காதல் ஜோடியை சந்திக்க விடாமல் தடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஏப்ரல் 7 - முழுநேரமும் வங்கிகள் செயல்படும்

 

டில்லி -  வரும்  ஏப்ரல் 7ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் முழு நாட்களும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Page 9 of 31

Latest Articles: