இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா அன்னா ஹஸாரேவால் ஊழலை ஒழிக்க முடியாது : குருதாஸ் குப்தா!

அன்னா ஹஸாரேவால் ஊழலை ஒழிக்க முடியாது : குருதாஸ் குப்தா!

அண்ணா ஹஸாரேவால் ஊழலை ஒழிக்க முடியாது : குருதாஸ் குப்தாகம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் 17-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில், அகில இந்தியப் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநிலத் தலைவர் கே. சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஏ ஐ டி யு சி யின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் குருதாஸ் குப்தா எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

"அன்னா ஹசாரே ஊழலை ஒழித்துவிடுவார் என்று நம்பாதீர்கள். ஊழலை அவ்வளவு எளிதாக ஒழித்துவிட முடியாது. ஊழல் கறுப்புப் பணத்தை உருவாக்குகிறது. அது மக்களிடம் இருந்து திருடப்பட்டது. எவ்வளவு பணத்தை திருட்டுக் கொடுத்தோம் என்பதற்கு நம்மிடம் கணக்கு இல்லை. நாம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் வாழ்கிறோம். நிலப்பிரபுக்கள் இன்னமும் இருக்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தால் நாடும், மனித வாழ்வும் கடும் சிக்கலில் இருக்கின்றன. இதிலிருந்து மக்களை நாடாளுமன்றம் விடுவிக்கும் என நம்பாதீர்கள். ஏனெனில் அது கோடீஸ்வரர்களின் சபையாகி விட்டது.

குளிர் காலம் என்பதால் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஆனால், அரிசி, கோதுமை, எண்ணெய் என அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. கல்வியும், மருத்துவமும் சாதாரண மக்களுக்கு எட்டாத இடத்துக்குச் சென்றுவிட்டன. அதே நேரத்தில், வேளாண் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஆலைகள் மூடப்படுவதால், தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் சீரழிகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதிலிருந்து கிடைக்கும் வட்டி இந்தியாவின் பட்ஜெட் தொகையைவிட அதிகமாக இருக்கும். தமிழக மக்கள் நேர்மையானவர்கள். ஆனால் இங்கிருந்து வரும் அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர். நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்து சிலர் உலகப் பணக்காரர்களாகியுள்ளனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். திருட்டை அனுமதிக்கும் அரசு இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளைக் மாற்றக்கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பிப்ரவரி 28-ம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் இதனை வெற்றிகரமாக நடத்த வேண்டும்."

இவ்வாறு குருதாஸ் குப்தா பேசினார்.

Comments  

 
+2 # RSS தொண்டன் 2012-02-07 16:28
அன்னா ஹசாரே
பெரிய திருடன் இவர்
ஊழலை ஒழித்துவிடுவார் என்று நம்பாதீர்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: