முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிணையில் வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாருதீன் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
அசாருதீன் மீது காசோலை மோசடி செய்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்திற்கு அவர் வரும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் அசாருதீன் இருப்பதால் அவரால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என அவருடைய வழக்குரைஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி விக்ராந்த் வைத் அவர் நீதிமன்றத்திற்கு வராததால் பிணையில் வெளியில் வரமுடியாத கைது ஆணையை பிறப்பித்துள்ளார்.
அசாருதீனைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
அசாருதீனைக் கைது செய்ய உத்தரவு!