இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா திருப்பதியில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை!

திருப்பதியில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை!

திருப்பதியில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை!திருப்பதி கோவிலுக்கு வரும் பெண்கள் இறுக்கமான ஆடை அணியக்கூடாது என்றும் மீறி இறுக்கமான ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடந்த சில ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட் - டி சர்ட் மற்றும் துப்பட்டா இல்லாமல் சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர். இனிமேல் இது போன்று ஆடை அணிந்து வந்தால் அவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இனி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பெண்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரில்தான் வர வேண்டும்.

அதேபோன்று ஆண்கள் லுங்கியில் வரக்கூடாது. கண்டிப்பாக வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணிந்து தான் வரவேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த ஆடைக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது அதை தீவிரமாக செயல்படுத்த இருக்கிறோம். ஆடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கோவிலில் இருந்து வெளியேற்றுவோம்."

மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments  

 
+2 # மயில்சாமி 2012-02-06 10:32
********** *********** ************ ஹிந்து நன்பர்களா இததான இஸ்லாம் 1450 வருசதிற்கு முன்னாடியே சொன்னது,இது போல பல செய்திகள் இஸ்லாதில் உ ண்டு......
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Peace 2012-02-06 12:27
இதை தானே இஸ்லாம் கூறுகிறது ... அப்போது மட்டும் ஏன் பெண்களை இஸ்லாம் ஒடுக்கிரதாக பொய் பரப்புரீர்கள் ...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # நீதியரசன் 2012-02-06 12:40
என்ன இது தலிபான்களின் அடக்குமுறை(!) மாதிரி அல்லவா இருக்கு. இந்துத்வவாதிகள் எப்போது தாலிபா ஆனார்கள்! இதையே முஸ்லிம் செய்தால் தான் பிரச்சனையா! என்ன கொடுமை சார் இது!!!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # நம்பிக்கையாளன் 2012-02-07 21:22
இதைத்தான் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று சொல்வார்கள். காரணம் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் இஸ்லாம் ஆடை விஷயத்தில் பெண்களை சற்று அதிகம் மறைக்க சொல்கிறகு. அதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்புதான். இதை நாம் ஏன் புரிந்துக்கொள்வதில்லை. அதற்கு ஏன் தீவிரவாதம் அடிமைத்தனம் என்று பெயர் சூட்ட வேண்டும். இப்போது உங்களுக்கு அது தேவை படுகிறது அல்லவா? இஸ்லாம் மனிதனின் மார்க்கம் அல்ல இறைவனின் மார்க்கம் இறைவன் மனிதனின் வாழ்க்கைக்கு எது தேவை எது தேவையில்லை என்று அறிந்தவன் எனவே இஸ்லாமிய சட்டங்களை சற்று சிந்துத்துப்பாருங்கள். அது உங்களுக்கும் தேவை உள்ளதே.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: