இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா குஜராத் இனக்கலவர அறிக்கையை ஜாகியாவிடம் வழங்க உத்தரவு!

குஜராத் இனக்கலவர அறிக்கையை ஜாகியாவிடம் வழங்க உத்தரவு!

குஜராத் இனக்கலவர அறிக்கையை ஜாகியாவிடம் வழங்க உத்தரவு!2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரம் சம்பந்தமான சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையை ஜகியா ஜாப்ரிக்கு வழங்க வேண்டும் என அஹ்மதாபாத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குஜராத் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி. இவர் குல்பர்கா கூட்டுக் கொலைகள் பற்றி  சிறப்பு புலனாய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் நகல் தனக்கு வழங்கப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இன்று இந்த வழக்கு சம்பந்தமாக உத்தரவிட்ட அஹ்மதாபாத் நீதிமன்றம், "அறிக்கையின் நகல் ஜகியா ஜாப்ரிக்கு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளது. இதனை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் முகுல் ஷர்மாவுக்கும் தீஷ்தா செடல்வாடிற்கும் நகல் கொடுக்கத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பில் மகிழ்ச்சியடைவதாக இஹ்ஸான் ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: