இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா கடன் தொல்லை: 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை

கடன் தொல்லை: 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் ஜாவீத் பாட்ஷா, கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி ஷகிலா பானு, மகன்கள் முசாதிக், வாஹித், மகள்கள் யாஸ்மின், தஸ்மின் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் வாஹித் தவிர மற்ற 5 பேரும் நேற்று முன் தினம் வீட்டில் தூக்கில் தொங்கினார்கள். முன்னாள் இரும்பு வியாபாரியான ஜாவீத் பாட்ஷா-வுக்கு அத்தொழிலில் நஷ்டம் ஏற்படவே விவசாயம் செய்து வந்தார்.

விவசாயத்திலும் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிகிறது

ஜாவீத் பாட்ஷா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் விவசாய நிலத்தின் உரிமையாளர் சிவமல்லே கவுடா, உள்ளிட்டோர்களுக்கு தர வேண்டிய கடன் தொகை குறித்தும், ஜாவீத் பாட்ஷா-வுக்கு வர வேண்டிய கடன் தொகை குறித்தும் தெரிவித்துள்ளார்.

எங்களின் தற்கொலைக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லையே காரணம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்தவரான ஜாவீத் பாட்ஷா வீட்டு சுவரில் இந்து கடவுள்களான அனந்த பத்மநாப சுவாமி, ராகவேந்திர சுவாமி ஆகியோர்களின் படங்கள்  மாட்டப்பட்டுள்ளது.

5 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நிலத்தின் உரிமையாளர் சிவமல்லே கவுடா உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதால், அப்பகுதியே சோகமயமாக இருக்கிறது

Comments  

 
0 # born rulerz 2012-01-28 09:58
ada paavingala kudumabathiya kola pannitu eppadilam set panni irukanga ada nastam irunda ipadiya chancey illa..............
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Mohamed Usmanm 2012-01-28 12:08
SUICIDE IS NOT A SOLUTION FOR EVERYTHING. BEING A MUSLIM HE DID NOT HAVE FAITH WITH HIS GOD AND HE TOOK WRONG WAY ALONG WITH HIS FAMILY.

BE A SELF CONFIDENT PERSON. GOD ALWAYS OPEN THE DOOR FOR HIS CREATURES IF ONE CLOSED ANOTHER. TRUST THE GOD YOU WILL NOT SUFFER,
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: