இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா சைபர் குற்றவாளிகளின் பிடியில் ஆந்திர அரசு இணையதளங்கள்.

சைபர் குற்றவாளிகளின் பிடியில் ஆந்திர அரசு இணையதளங்கள்.

ஆந்திர அரசின் 21 இணைய தள சர்வருக்குள், சைபர் குற்றவாளிகள் நுழைந்து, இணைய தளத்தை முடக்கியுள்ளனர்.

நாளை சட்டசபையில்  பட்ஜெட் தாக்கல் செய்யபடவுள்ள நிலையில் விஷமிகள் பட்ஜெட் குறித்த தகவல்கள் இருந்த இணையதளத்தை ஹேக் செய்து. தங்களின் கருத்துக்களுடன் கூடுதல் பக்கங்களையும் சேர்த்துள்ளனர்.

கெஜட் அறிவிப்புகள், அரசு உத்தரவுகள், வணிக வரிகள் உள்ளிட்ட துறைகளின் இணையதளங்களை அவர்கள் முடக்கியுள்ளனர்.

ஆனால் ஹேக் செய்யப் பட்டுள்ள http://budget.ap.gov.in என்ற  தளத்தில் பட்ஜெட் தொடர்பான எந்த விவரங்களும் இடம்பெறவில்லை என கூறியுள்ளனர்.பட்ஜெட் தாக்கல் செய்த பின்னரே இணைய தளங்களில் பட்ஜெட் விவரங்கள் வெளியிடப் படும் என்றும் ஆந்திர நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: