இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!

போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!

போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!ராஜஸ்தான் மாநிலத்தில் சாராய வியாபாரியான தாராசிங்கை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தாராசிங் போலி என்கவுண்டரில் சுடப்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஏ.கே.ஜெயின், காவல்துறை சூப்பிரண்டு ஏ.பொன்னுசாமி, கூடுதல் சூப்பிரண்டு அர்ஷத் அலி, ஆய்வாளர்கள் ஜுல்பிகார், ராஜேஷ் சவுத்ரி,  துணை ஆய்வாளர் அரவிந்த் உள்பட 16 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இவர்களில் கூடுதல் டி.ஜி.பி. உள்பட 10 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக சி.பி.ஐ அறிவித்து உள்ளது. பொன்னுசாமி உள்பட 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டார்கள்.

கூடுதல் டி.ஜி.பி ஏ.கே.ஜெயின் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சமும், ஆய்வாளர்கள் ராஜேஷ் சவுத்ரி, ஜுல்பிகார், துணை ஆய்வாளர் அரவிந்த் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் தலா ரூ.5 லட்சமும் பரிசளிக்கப்படும் என்று நேற்று சி.பி.ஐ. அறிவித்தது.

அம்மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி பற்றி சி.பி.ஐ இவ்வாறு அறிவித்து இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: