இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா பெண் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர் மனைவி கைது!

பெண் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர் மனைவி கைது!

கர்நாடக மாநிலத்தில் பணி புரியும் ஐ.ஏ.எஸ் எதிகாரி பங்கஜ் குமார் பாண்டே. இவரின் மனைவி அனுஜா துபே பாண்டே தம் மகளுடன் நேற்று முன்தினம்  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியைக் காண வந்திருந்தார்.

1 ம் எண் நுழைவாயில் வழியாக தம் மகளுடன் ஸ்டேடியத்துக்குள் நுழைய முயன்ற அனுஜாவிடம்  ஒரு டிக்கெட் மட்டுமே இருந்த நிலையில் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார் பெண் காவல்துறை ஆய்வாளர் அஞ்சுமாலா நாயக்.

இது தொடர்பாக அனுஜாவுக்கும் பெண் காவல்துறை ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அனுஜா கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு போன் செய்து அங்கு வந்த கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றொரு டிக்கெட்டையும் அளித்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

போட்டி முடிந்து வெளிய வந்த போது அங்கு பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி அஞ்சுமாலா நாயக்கிடம் அனுஜா மீண்டும் தகராறு செய்து திட்டியதுடன் அஞ்சுமாலா நாயக்கை கன்னத்தில் ஆராய்ந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அஞ்சுமாலா நாயக் புகார் அளித்தார்.

அனுஜா, பெண் அதிகாரி அஞ்சுமாலா நாயக்கை கன்னத்தில் அறைந்தது அங்குள்ள சி சி டி வி யில் பதிவானதை அடுத்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியை கைது செய்துள்ளனர்.

Comments  

 
0 # khadir 2012-01-31 21:35
கன்னத்தில் ஆராய்ந்துள்ளார்.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: