இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா..? - உச்சநீதிமன்றம்

ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா..? - உச்சநீதிமன்றம்

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377ன் படி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் இருக்கிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

டெல்லி உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பி.பி. சிங்கால் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் முறையீடு செய்தனர். பி.பி.சிங்கால் தனது முறையீட்டில், ``ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது, இந்திய கலாசாரத்துக்கு எதிரானது'' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் உரிமைக்கான டெல்லி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அமரேந்திர சரண் வாதிடும்போது, ``ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் ஆகிய ஓரினச்சேர்க்கைகளை இயற்கை அங்கீகரிக்கவில்லை. இவை இயற்கையின் ஒழுங்குக்கு எதிரானவை'' என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ``ஓரினச்சேர்க்கை என்றால் என்ன? இது இயற்கைக்கு எதிரானதா? இயற்கையின் ஒழுங்குமுறையை விளக்கக்கூடிய வல்லுனர் யார் இருக்கிறார்கள்? வாடகைத்தாய், சோதனைக்குழாய் குழந்தையும் கூட இயற்கைக்கு எதிரானவர்கள்தானா?'' என தொடர்சியாக கேள்விகள் எழுப்பினர். வழக்கு விசாரணை தொடர்ந்து இன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments  

 
+6 # Warrant Balaw - Law Researcher, Writer 2012-02-17 08:40
எழுப்பப்படும் சிக்கலுக்குரிய கேள்விகளுக்கு தீர்வு சொல்ல வேண்டிய நீதிபதிகள், தங்களின் அறிவு வெறுமையால் எழுப்பப்படும் தீர்வுக்கான சமாச்சாரங்களில் கூட, அற்பத்தனமான கேள்விகளை கேட்டு கொண்டு உள்ளனர். ஓரினச் சேர்க்கையில் உயிரினம் உற்பத்தியாகுமா?

உயிரினம் உற்பத்தியாகத்தானே இயற்கையின் இருபாலின படைப்பு! இந்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள் எல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்றால் கேவலம்தானே!?
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # salim 2012-02-17 15:05
You are absolutely right brother
பதில் | Reply with quote | Quote
 
 
0 # AHMED 2012-02-17 23:39
Quote:
எழுப்பப்படும் சிக்கலுக்குரிய கேள்விகளுக்கு தீர்வு சொல்ல வேண்டிய நீதிபதிகள், தங்களின் அறிவு வெறுமையால் எழுப்பப்படும் தீர்வுக்கான சமாச்சாரங்களில் கூட, அற்பத்தனமான கேள்விகளை கேட்டு கொண்டு உள்ளனர். ஓரினச் சேர்க்கையில் உயிரினம் உற்பத்தியாகுமா?

உயிரினம் உற்பத்தியாகத்தானே இயற்கையின் இருபாலின படைப்பு! இந்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள் எல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்றால் கேவலம்தானே!?


+1
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ansaari 2012-02-21 13:41
நண்பரின் விளக்கம் மிக அருமை, இவர்கல் எப்படி நீதிபதி ஆனார்கள்..... இவர்களின் கேள்வி பாமரத்தனமானது...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ABDUL HALEEM 2012-02-20 17:39
முதலில் ஆணும் பெண்ணும் விருப்பப்படி தப்பு செய்தால் தன்டனை இல்லை என அரசியல் சாசனதிலேயே எழுதி வைத்துள்ளாறர்கள். இப்போ இந்த கொடுமை வேரயா....
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Warrant Balaw - Law Researcher, Writer 2012-02-21 06:24
Quoting ABDUL HALEEM:
முதலில் ஆணும் பெண்ணும் விருப்பப்படி தப்பு செய்தால் தன்டனை இல்லை என அரசியல் சாசனதிலேயே எழுதி வைத்துள்ளாறர்கள். இப்போ இந்த கொடுமை வேரயா....


நண்பரே, நீங்கள் குறிப்பிடுவது போல் இந்திய அரசமைப்பில் எதுவுமே கிடையாது. குற்றம் தொடர்பான அனைத்து விடயங்களும் இந்திய தண்டனை சட்டம் 1860 இல் தான் வரும்.

இதிலும், ஆணும், பெண்ணும் விருப்பப்படி உறவு கொண்டால் குற்றமில்லை என்று சொல்லவில்லை. கணவன், மனைவி என்ற உறவு முறை இல்லாமல், மேற்கொள்ளப்படும் உறவுகள் குற்றம் என்பதே உண்மையான சாரம்.

இது போன்ற சரியாக தெரியாத, தவறான தகவல்களை பதிவு செய்வதை தவிர்க்கவும்.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: